ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ இயக்கதில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
மெர்சல் படத்தின் கூட்டணி இப்படத்திலும் இணைத்ள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில்பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை அண்மையில் துவங்கியது. இதற்கடையில், தளபதி 63 படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதாக தகவல் கசிந்தது. இந்தப் படம் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய படம் என்றும் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதற்காக 16 பெண்களை படக்குழு தற்போது தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினர் இத்தகவலை இன்னும் அதிகாரப்பூர்வ்மாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு