• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜீவி தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது- வசந்த பாலன்

November 17, 2018 தண்டோரா குழு

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,மின்சாரக் கனவு படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவு பெற்றிருக்கின்றன.விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில்,இப்படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.அதேசமயம்,ராஜீவ் மேனனுக்கு நெருக்கமான திரைத்துறை நண்பர்களுக்கு படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,இப்படத்தைப் பார்த்த இயக்குநர் வசந்த பாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில்,”நேற்று இரவு ஜீவியின் அன்பு அழைப்பின் பேரில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை காண வாய்ப்பு கிட்டியது.இசை திரைப்படங்கள் மீது எனக்கு அலாதியான பிரியம்.WHIPLASH என்ற ஆங்கில திரைப்படத்தின் மீது எனக்கு தணியாத காதல் உண்டு.குரு சிஷ்ய உறவை மையமாக கொண்டு ஒரு இசைப்படத்தை உருவாக்குவது மிக கடினமான காரியம்.அப்படத்திற்கு கதை எழுத ஆழமான இசையறிவு தேவை.

இசைக்குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் மேனன் அவர்கள் இந்த கதையை மிக அழகாக,ஆழமாக,நுட்பமாக,சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். நெடுமுடிவேணு மிருதங்க வித்வானாக வாழ்ந்துள்ளார்.தேசிய விருது காத்திருக்கிறது.ஆயிரம் நமஸ்காரங்கள் வேணு சார்.

ஜீவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனாக தன் மெய் வருத்தி நடித்துள்ளார்.அவர் கண்களில் தெறிக்கும் பதின்வயது குழப்பம், பதட்டம்,தடுமாற்றம்,அழுகை,வெறி,ஏக்கம்,காதல்,குருபக்தி இப்படி அத்தனை உணர்வுகளையும் திரையில் கடத்தியுள்ளார்.ஜீவி தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது.வாழ்த்துகள் ஜீவி என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க