 November 14, 2018
November 14, 2018  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                ‘நாச்சியார்’ படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
காற்றின் மொழி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார்.இந்தியில் நேகா நடித்த வேடத்தில்,லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.போப்டா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.இப்படம் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில்,பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியில் பி.எட் படிக்கும் 160 மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.