 November 14, 2018
November 14, 2018  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                நடிகர் ரன்வீர் சிங் – நடிகை தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் கொங்கனி முறைப்படி நடைபெற்றது.பாலிவுட்  திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங்கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மந்தம் தெரிவித்த நிலையில், இன்று இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில்,வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் இவர்களது திருமணம் கொங்கனி முறைப்படி நடைபெற்றது.  
நாளை ஆனந்த் கராஜ் முறை திருமணம் நடைபெற உள்ளது.இவர்களின் திருமணத்திற்காக அழகிய நகரமான லேக் கோமாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.தீபிகா,ரன்வீரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,திருமண விழாவுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரையும் மிகுந்த மரியாதையோடு இருவரும் சேர்ந்து வரவேற்றுள்ளனர்.இதையடுத்து,இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.