• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டாலினும் தினகரனும் பலமுறை சந்தித்து பேசியுள்ளனர் – ஓபிஎஸ்

November 5, 2018

ஸ்டாலினும் தினகரனும் பலமுறை சந்தித்து பேசியுள்ளனர் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக பூர்வாங்க தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக-வே வெற்றிபெறும்.அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், 8 தொகுதிகளிலாவது வெற்றி என்பது போல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. பிரிந்து சென்றவர்களை அழைத்தது தங்கள் பெருந்தன்மை என்றும், வாரதது அவர்கள் மனோநிலை. பொதுவாக எந்த தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்தவர் ஜெயலலிதா அதயே நாங்களும் பின் பற்றுகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் கொள்கைக்கு ஒத்துபோகிறவர்கள் எங்களுகளுடன் இணைவதற்கு ஆசைப்பட்டால் அவர்களை கூட்டணியில் இணைத்து கொண்டு வெற்றி பெறுவோம். மு.க.ஸ்டாலின்-டிடிவி தினகரன் ரகசிய சந்திப்புகள் குறித்து தங்களுக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். பல கூட்டங்களில் இது குறித்து நான் வலியுறுத்தி சொல்லி வந்துருக்கிறேன். வடகிழக்கு பருவமழை காலத்தில், மக்களுக்கு பாதிப்புகள் நேராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க