• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்மீகம் ,கடின உழைப்பின் மூலம் ரஜினி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்- ஏ.ஆர்.ரஹ்மான்

November 3, 2018 தண்டோரா குழு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் எமி ஜாக்‌ஷன்,அக்‌ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்,

“‘2.0’-வில் 4 பாடல்கள் உள்ளன.ஆரம்பத்தில் பின்னணி இசை மட்டுமே பாடல்களே இல்லை என்றுதான் ஆரம்பித்தோம்.ஆனால் 4 பாடல்கள் உருவாகிவிட்டன. இந்த ஒரு படத்துக்கு இசையமைத்தது 8 படங்களுக்கு இசையமைத்த அனுபவத்தைத் தந்தது.மூன்று ஆண்டுகள் உழைப்பு.இப்போதுகூட அண்மையில் இசையில் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன் என்றார்.

அப்போது ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசையமைப்பாளர் அனிருத்,நீங்கள் இசையமைத்த படங்களில் நடித்த ஹீரோக்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் தான்.அவருடைய ஆன்மீகம்,கடின உழைப்பின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அதனால் எனக்கு பிடித்த ஹீரோ ரஜினிகாந்த் தான்.ஆஸ்கர் வாங்கியதற்கு பின்பு நான் 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் ரஜினிகாந்தின் உழைப்பை பார்த்து வியந்தேன். அதுதான் எனக்கும் உந்துதலாக இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் படிக்க