“சர்க்கார் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் அதில் எந்த மாற்றமுமில்லைஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, தன்னுடைய ‘செங்கோல்’ கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், சர்கார் கதையும் செங்கோல் ஓன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து, இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார். படத்திற்கான கதை என்று டைட்டில் கார்டில் நன்றி ராஜேந்திரன் என்று குறிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் , இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்,
வழக்கம்போல் நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இயக்குநர் பாக்கியராஜ் என்னை அழைத்து நிறைய பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஒருவரின் ஓட்டை கள்ளஓட்டு போட்டுவிட்டார்கள் என்பது போன்ற கதையை உதவி இயக்குநர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இது தான் படத்தின் மையக்கரு
அந்த ஓன்று தான் மற்றபடி சர்கார் கதைக்கும் செங்கோல் என்ற கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், உங்களுக்கு முன்னாடியே அவர் பதிவு செய்துள்ளதால் அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படத்தின் துவக்கத்தில் ஒரு டைட்டில் கார்டு போடும்படி கேட்டுகொண்டார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அவ்வளவு தான். மற்றபடி ”செங்கோல் கதைக்கும், சர்கார் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஏ.ஆர். முருகதாஸ் மட்டுமே”. ஹாப்பி தீபாவளி எனக் கூறியுள்ளார்.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்