• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழிவாங்கும் அதிவேக பைக்குகள்

September 3, 2016 தண்டோரா குழு

கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி இளம் வயது வாலிபர்களும் தற்போது அதிவேக பைக்குகளை வாங்கி அதற்கு தன்னுடைய உயிரையும், இரத்தத்தையும் காணிக்கையாகத் தருவது தற்போது அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக இருசக்கர வாகனத்தில் அதிவேக பைக்குகள் பிரபலமாகி வருகிறது. இவை அனைத்தும் இளைஞர்களைக் குறிவைத்தே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் வண்டியை வாங்கியவுடன் அதி வேகமாக ஒட்டி சாகசம் செய்வதைப் பெருமையாக நினைக்கின்றனர்.அதிலும் ஒரு சிலர் அதிக தூரம் சென்று திரும்புவதை நட்பு வட்டாரத்தில் பெருமையாக நினைத்து வருகின்றனர்.

இது பல்வேறு சமயங்களில் ஆபத்தில் முடியும் என அவர்கள் நினைப்பதில்லை.அவ்வாறு இன்று காலை சேலத்தில் இருந்து வேலூர் வி.ஐ.டி கல்லூரிக்கு அதிவேக இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் அரவிந்த் மற்றும் இளவரசன் ஆகியோர், வாணியம்பாடி பெருமாள்பேட்டை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு வேலி மீது மோதியது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் வழக்கு பதிவுசெய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க