• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்

October 25, 2018 தண்டோரா குழு

20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்ப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்றுஅதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

“18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், ஒருவேளை அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதித்ததாகவும் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க