இந்தியாவில் மீடு என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மீடு மூலம் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.இதனால் அவர் இணையமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார்.
தமிழகத்தில் மீடு ஹாஸ்டேக் மூலம் பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.அவரை தொடர்ந்து பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சமுக வலைதளங்களில் மீடு மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரும்,கபாலி பட நடிகையுமான நடிகை ராதிகாஆப்தே மீடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளர்.அதில், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட,பல நடிகைகள் மீடு மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.இனிமேல்,இது போன்ற பாலியல் தொல்லைகள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் நடக்கக் கூடாது.அதற்கு இந்த மீடு தான் சரியான வழி என்று கூறியுள்ளார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்