• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளியில் வடமாநில தொழிலாளர்களை தங்க வைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு

October 9, 2018 தண்டோரா குழு

கோவை மதுக்கரையில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் வடமாநில தொழிலாளர்களை சிமெண்ட் ஆலை நிர்வாகம் தங்க வைத்துள்ளதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ACC சிமென்ட் ஆலை வளாகத்தில் ACC மிடில் ஸ்கூல் என்ற அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் வடமாநில தொழிலாளர் வருகை உட்பட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் எண்ணிக்கையானது படிப்படியாக குறைந்து தற்போது 52 மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள்.

பள்ளி வளாகத்தில் உள்ள 15 வகுப்பறைகளில் 7 வகுப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கக்கூடிய நிலையில்,காலியாக உள்ள மற்ற வகுப்பறைகளில் வடமாநில இளைஞர்களை ஆலை நிர்வாகம் தங்க வைத்துள்ளது.கடந்த 10 நாட்களாக வடமாநில இளைஞர்கள் பயன்பாட்டில் இல்லாத வகுப்பறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,பள்ளி வகுப்பறைகள் முழுவதும் வடமாநில இளைஞர்கள் பயன்படுத்திய மதுபாட்டில்கள் சிதறி கிடப்பத்தாகவும்,வகுப்பறைகளில் தங்கியிருக்கக் கூடிய வடமாநில இளைஞர்கள் அரை குறை ஆடைகளுடன் சுற்றுவதுடன்,பள்ளி வளாகத்திலேயே மது அருந்துவதும், புகைபிடிப்பதுமாக போதையில் இருப்பதால் பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் இது குறித்து ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க