• Download mobile app
27 Aug 2026, ThursdayEdition - 3851
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊழல் எதிர்ப்பை விஜய் உறுதிப்படுத்தினால் எனது ஆதரவு நிச்சயம் இருக்கும் – கமல்ஹாசன்!

October 5, 2018

ஊழல் எதிர்ப்பை விஜய் உறுதிப்படுத்தினால் அவர் தமது சகோதர மனப்பான்மை கொண்டவர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்ககளை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான மனுவை மூவர் குழுவிடம் அளிக்கவுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை ஒப்புதல் அளிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள்தானே ஒழிய, எங்கோ உட்கார்ந்து கொண்டு சில அதிகாரிகள் கோப்புகளை நகர்த்துவது ஒப்புதல் ஆகி விடாது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க மத்திய அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை குறித்த கேள்விக்கு “அதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றில்லை, அது அவர்களது கடமை” என தெரிவித்துள்ளார்.

மேலும், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “விஜய் தம்பிக்கு விருப்பம் இருந்தால் அவர் அரசியலுக்கு வரலாம். அவர் ஊழல் ஒழிப்பை கொள்கையாக கொண்டு இருப்பதை ஊர்ஜிதப்படுத்தினால் அவர் தமது சகோதர மனப்பான்மை கொண்டவர் என்றும்
அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு நிச்சயம் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க