சுவையான கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!
சுவையான கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி எப்படி எளிதாக நம் வீட்டிலே சமைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்!
சுண்டைக்காய் வற்றல் – 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, தனியா – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8, வெந்தயம் – 3 டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், பெரிய தக்காளி – 1, நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன், மிளகு – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பெரிய தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது), வெல்லம் – சிறிது, கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை!
கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கவும்.
அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.
உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சுவையான வெந்தயகுழம்பு
சுவையான வெந்தயகுழம்பு தயார்.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்