• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதி

August 30, 2016 தண்டோரா குழு

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இன்று விஜயவாடாவில் திடீர் என உடல் நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காஞ்சி மடத்தின் 69-வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி (81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென மயக்கம் அடைந்தார்.இதையடுத்து அங்கிருந்த மட உதவியாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறும்போது,ஜெயேந்திரருக்கு ரத்தம் அழுத்தம் மற்றும் சோடியம் அளவு குறைந்துள்ளது.

இதற்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை.சிடி ஸ்கேன் போன்றவையும் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது.மாலை வரை அவர் ஐசியுவில் கண்காணிக்கப்படுவார் பின்னர் அவரது உடல் நலம் தேறியதும் வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க