• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்கள் யாரும் என்னைத் தவறாக நினைக்கமாட்டார்கள்- சேரன்

August 27, 2016 தண்டோரா குழு

சமீபத்தில் புதுமுக இயக்குனரான தியாவின் இயக்கத்தில் வெளியாகும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன் திருட்டு விசிடி குறித்துப் பேசும் போது, இலங்கைத் தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்துப் போராடியிருக்கிறோம்.

ஆனால் அதைச் சார்ந்த சில நண்பர்கள் தான் இதைச் செய்கிறார்கள் என்கிற போது, ஏண்டா இதையெல்லாம் செய்தோம் என அருவருப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது என்றார். இதற்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர்
சேரன் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் எதற்காகப் பேசினேன் யாரைப்பற்றிப் பேசியிருப்பேன் எனப் புரிந்திருக்கும். என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது. இது வரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது.

ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறிய போது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை. அப்போது எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லையா என்றார்.

மேலும், உலகெங்கும் நண்பர்களைக் கொண்டு (அவர்களும் இலங்கைத் தமிழர்கள் தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்ற போது அவர்களைத் தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான். ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு.

நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும். அவர்கள் யாரும் என்னைத் தவறாக நினைக்கமாட்டார்கள் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க