• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல்?

September 6, 2018 தண்டோரா குழு

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.இந்தப் படத்தில் அரவிந்த் சாமி,ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி,அதிதி ராவ்,அருண் விஜய்,ஐஸ்வர்யா ராஜேஷ் பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.இந்நிலையில்,இயக்குனர் மணிரத்னம்,இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்,கவிஞர் வைரமுத்து ஆகியோரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.அதற்கு அவர்கள் சுவாரஸ்யமான பதில்களை அளித்தனர்.

அப்போது பேசிய வைரமுத்து,மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது ‘பம்பாய்’ படத்தில் இடம் பெற்ற ‘உயிரே உயிரே’ பாடல் தான்.மேலும் இப்படத்தில் இடம்பெற்ற “கண்ணாலனே” பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவிற்கு வந்து,ரசித்து கேட்ட பாடல் என்றுக் கூறினார்.

மேலும் படிக்க