• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாக சந்தேகித்து இளைஞருக்கு தர்ம அடி

August 29, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பிரசவ வார்டில் அத்துமீறி நுழைந்த இளைஞரை குழந்தை கடத்த வந்தவர் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு புகாரையடுத்து,கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில் இன்று காலை பிரசவ வார்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் அத்துமீறி நுழைந்து உள்ளனர்.அப்போது பெண் காவலாளியான கீதா என்பவர், இளைஞரை பிடிக்க முயற்சித்துள்ளார்.இதனால் அச்சமடைந்த இளைஞர்,அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சித்துள்ளார்.

கீதாவின் கூச்சலையடுத்து திரண்ட,காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞரை பிடித்து கடுமையாக தாக்கினர்.இதையடுத்து,பந்தய சாலை காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.பின்னர் அந்த இளைஞரை போலீசார் அழைத்து சென்றனர்.விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.மேலும் மற்றொருவர் தான் பெண் பார்க்க வந்ததாக கூறியுள்ளார்.ஆனால் தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க