• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் 700 கோடி நிதியுதவியை ஏற்க வாய்ப்பில்லை !

August 22, 2018 தண்டோரா குழு

கேரளாவுக்கு மழை வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700 கோடியை மத்திய அரசு ஏற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்துள்ளனர்.கேரளாவில் பல்வேறு மாநிலங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில் கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.ஆனால் தற்போது இந்த நிதியுதவியை மத்திய அரசு ஏற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் குஜராத்,மும்பை,சென்னை,உத்தரகான்ட் ஆகிய இடங்களில் இயற்கை பேரிடரின் போதும் வெளிநாட்டு நிதியை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க