• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்வரி விதிக்க லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

August 16, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் வாடப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியான பேளூர் பேரூராட்சியில் பில் கலெக்டராக இருப்பவர் கண்ணன். இவரிடம் அதே பகுதியைச்சேர்ந்த கனகராஜ் என்பவர் தொழில்வரி விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து குறைவான மதிப்பில் தொழில்வரி விதிக்கவேண்டும் என்றால் தனக்கு 1,500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். லஞ்சம் தர மனமில்லாத கனகராஜ் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் வகுத்த திட்டப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கனகராஜ் இன்று காலை கண்ணனிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியவுடன் மறைந்திருந்த டி.எஸ்.பி சந்திரமௌலி தலைமையிலான லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர்.

மேலும் நீண்ட விசாரணைக்குப்பின் அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனால் பேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க