• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கு மிகவும் பிடித்த தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் – கமல்ஹாசன்

June 30, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் டிவிட்டர் நேரலையில் மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். எனினும் பலர் #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் கமலிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சசிகுமார் என்பவர், உங்களின் தம்பி விஜய் அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா ? என கமலிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க