• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:டிரம்ஸ் சாதனை சிறுவனுக்கு பாராட்டு விழா!

June 4, 2018 தண்டோரா குழு

கோவையில் ட்ரம்ஸ் வாசிப்பில் சாதனை படைத்த 12 வயது நிரம்பிய ராகவ்க்கு நேற்று பாராட்டு விழா நடைப்பெற்றது.

கோவை சச்சின் மற்றும் பல்லவி தம்பதியரின் மகன் ராகவ் கொடேச்சா, மூன்று வயதில் இருந்தே டிரம்ஸ் வாசிப்பை தனது குருநாதர் இளங்கோ விடம் கற்க ஆரம்பித்தார்.சிறுவயது முதலே டிரம்ஸ் வாசிப்பதில் ஆர்வமான ராகவ் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகள் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் டிரம்ஸில் பல தேர்வுகள் எழுதி சாதனைகளைப் படைத்துள்ளார்.

ட்ரினிடட்டி பள்ளியில் இசை கற்று சாதனை படைத்துள்ள இவர் கோவையின் இளம் வயது சாதனையாளர், வாழ்நாளில் தொடர்ந்து 12 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை அடைவதே தனது இலட்சியம் என்று கூறினார்.அவருடைய இந்த சாதனையை பாராட்டி லோகானா மகாஜன் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் ராகுவ்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க