• Download mobile app
16 Aug 2026, SundayEdition - 3840
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில்

April 26, 2018 findmytemple.com

சுவாமி: பாண்டவ தூதர் திருக்கோலம் (கிழக்கே திருமுக மண்டலம்).
அம்பாள்: ருக்மணி, சத்யபாமா.
தீர்த்தம்: மத்ஸ்ய தீர்த்தம்.
விமானம்: சக்கர விமானம், வேத கோடி விமானம்.

தலச்சிறப்பு:

இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் புன்னகையோடு காட்சியளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.புதத்தாழ்வார்,பேயாழ்வார்,திருமழிசையாழ்வார்,திருமங்கையாழ்வார் ஆகியோர் புகழ்ந்து பாடிய பேறு பெற்று மங்களாசாசனம் செய்த திருத்தலம்.108 திவ்ய தேசங்களில் இத்தலம் 49 வது திவ்ய தேசம் ஆகும்.

அருகிலுள்ள நகரம்: காஞ்சிபுரம்.

கோயில் முகவரி: அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில்,திருப்பாடகம் காஞ்சிபுரம் – 631 502, காஞ்சிபுரம் மாவட்டம்.

மேலும் படிக்க