• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சல்மான் கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி திடீர் இடமாற்றம்

April 7, 2018 தண்டோரா குழு

சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மான்கள் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம்  5  ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சல்மான் கான் தனக்கு ஜாமீன் வழங்கி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி  திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம்  87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது.வழக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 30 தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க