March 23, 2018
தண்டோரா குழு
தென் இந்தியாவின் 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும்,டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தியது.அதில்,தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது.அவை திராவிடம், ராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உள்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் அந்த மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த 6 மொழிகளில் முதன்மையானதும்,பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.இதில் திராவிட மொழிக் குடும்பம், சுமார் 80 மொழிகளை உள்ளடக்கியது.கிட்டத்தட்ட 22 கோடி மக்கள் அம்மொழிகளை தற்போது பேசுகின்றனர்.இதுமட்டுமின்றி திராவிட மொழிக் குடும்பத்தில் பழமையான மொழி தமிழ்தான்.
மேலும்,உலகின் மூத்த மொழிகளில் தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன என அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.