March 23, 2018
தண்டோரா குழு
பெண்களுக்கு,இந்து மத தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சக்தி சேனா அமைப்பினர் இன்று(மார்ச்23)மனு அளித்தனர்.
அண்மை காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது.அதே போல் இந்து அமைப்பு தலைவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.எனவே பெண்களுக்கும் இந்து மத தலைவர்களுக்கு உரிய பாதுக்காப்பு வழங்க வேண்டும்,அல்லது தற்காப்பிற்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி பொம்மை துப்பாக்கியுடன் சக்தி சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.