• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறைந்த எடையில் பிறக்கும் குழந்தை இறப்பு தடுப்பதில் கோவை அரசு மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்

March 19, 2018 தண்டோரா குழு

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம்  குழந்தைகள் இறப்பை தடுப்பதில் கோவை அரசு மருத்துவமனை மாநில அளவில் மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர்.பிரசவத்த்திற்கு என பிற அரசு மருத்துவமனைகளில் இருந்து 55 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.இந்நிலையில் எடை குறைவாக ஆபத்தான நிலையில் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதில் கோவை அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு குழந்தைகள் இறப்பை தடுப்பதில் மாநில அளவில் முதலிடம் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடப்பாண்டும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் இறப்பை தடுப்பதில் முதலிடம் பிடித்து உள்ளது.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குறைந்த எடை குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் வழங்கும் சிகிச்சை குறித்த அளவீடுகளின் அடிப்படையில் கோவை மருத்துவமனை  முதலிடம் பிடித்து உள்ளது.

மேலும் படிக்க