• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் பத்திரிகையாளரை ஆழகாக இருக்கிறீர்கள் எனக் கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்

March 16, 2018 தண்டோரா குழு

பெண் பத்திரிகையாளரை பார்த்து நீங்க ஆழகாக இருக்கிறீர்கள் எனக் கூறி அமைச்சர் விஜயபாஸ்கர்சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் முடிந்து வெளியே வந்துள்ளார்.எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க அவரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் அவர், கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களது ஸ்பெக்ஸ் அழகாக உள்ளது’  எனக் கூறியுள்ளார்.  பின்னர்’எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளை, கட்சி மேலிடம் அறிக்கையாக வெளியிடும்’ என்று சொல்லிச் சென்றுள்ளார். இதற்கிடையில்,  அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் செய்தியாளரிடம் பேசும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

மேலும் படிக்க