• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார்– சீமான்

March 12, 2018 தண்டோரா குழு

ரஜினி போராடவும் மாட்டார் அறிக்கை விடவும் மாட்டார் நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பளார் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 

குரங்கனி மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாமல் உள்ளே சென்றார்கள் என்றால் வனத்துறையில் சோதனை செய்ய ஆட்களே இல்லையா? அரசின் பதில் பொறுப்பற்றது.இயற்கையாக தீ பற்றினால் அணப்பதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லையா?பேரிடர் ஏற்படும் போதெல்லாம் இதே போல் தான் நடவடிக்கைகள் உள்ளது.குரங்கனி தீ விபத்தை முன்னிறுத்தி காட்டு பகுதிக்குள் யாரையும் செல்ல விடாமல் தடுத்து நியூட்ரினோ பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.

மேலும், பலவிஷயங்களில் ரஜினி கருத்து கூற மறுப்பது குறித்து கேட்ட கேள்விக்கு,அவர் அப்படிதான் நழுவி போவார்,  போராடவும் வர மாட்டார் அறிக்கை விடவும் மாட்டார் நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார் என்று சீமான் கூறினார்.

மேலும் படிக்க