• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாம்பை பழிவாங்க பாம்பின் தலையை கடித்து துப்பிய நபர்!

February 21, 2018 தண்டோரா குழு

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தன்னை கடித்த பாம்பின் தலையை  கடித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோயை சேர்ந்தவர் சோனல்லால் ,விவசாயியான இவர் கடந்த சனிகிழமை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம்பக்கதினர் மீட்டு சமுதாய சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், சோனல்லாலுக்கு நினைவு திரும்பியவுடன்  மருத்துவர்கள் என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறுமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர் மருத்துவர்களிடம் “என்னை பாம்பு கடித்து விட்டது அதை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த பாம்பின் தலையை கடித்து துப்பியதாக கூறினார்”.

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், 

நான் இதுவரை இப்படி ஒரு கேஸை பார்த்ததில்லை. பாம்பைக் கடித்த பின்பும் அவர் நன்றாக இருக்கிறார். நாங்கள் பாம்பு கடித்த இடத்தை தேடினோம் ஆனால் அவரது உடம்பில் பாம்பி கடித்ததற்கான அடையாளமே இல்லை. ஒருவேலை அவர் பாம்பின் தலையை கடித்து துப்புவதற்கு பதிலாக அவற்றை மென்றிருப்பார் அதனால் தான் பாம்பின் விஷம் அவரு உடம்புக்குள் சென்றிருக்ககூடும்  என்றும் ஒரு சாதாரன நிலையில் உள்ள மனிதன் இதை செய்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

 

மேலும் படிக்க