• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணம் துவங்கிய கமல் ஹாசன்

February 21, 2018 தண்டோரா குழு

நடிகர் கமலஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிபெற்று, தனது அரசியல் பயணத்தைத் நடிகர் கமல்ஹாசன் தொடங்கியிருக்கிறார்.நடிகர் கமல்ஹாசனை அப்துல்கலாம் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் வரவேற்றார். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக கலாமின் உறவினர்களுடன் நடிகர் கமலஹாசன் உரையாடினர்.கலாம் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர் அப்துல்கலாம் படம் பொறித்த நினைவுப் பரிசை வழங்கினார்.

பின்னர் பேசிய நடிகர் கமல்ஹாசன்,

கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும் பிரமிப்பூட்டும் எளிமையை கண்டேன்.கலாம் பயணம் தொடங்கிய இடத்திலேயே என் பயணத்தை தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்  என்று கூறினார்.

மேலும் படிக்க