• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கோனியம்மன் கோவிலின் இடத்தில் உள்ள பார்க்கிங்கை அகற்ற வேண்டும் – எச்.ராஜா

February 17, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள 38,635 கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடித்து கட்டப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய  செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை கோனியம்மன் கோவிலில் பேசிய பாஜக தேசிய  செயலாளர் எச்.ராஜா,

“கோவை கோனியம்மன் கோவிலின் குளம் இடத்தில் உள்ள பார்க்கிங்கை அகற்றி, கோவிலிடம் மாநகராட்சி உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

இந்து கோவில் சொத்துக்கள் 4,72,234 ஏக்கர், 22,000 கட்டிடங்கள், 33,000 மனைக்கட்டுக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக எடுத்துக்கொண்டு கோவில் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது என்பன உள்ளிட்ட விபரங்களை குழு அமைத்து தமிழக முதல்வர் விரைவாக அறிக்கை கொடுக்க வேண்டும்.

அறநிலையத்துறை கோவில்களையும், கோவில் சொத்துகளையும் காப்பற்றாவில்லை என்றும்,10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடிபாடுடன் பூஜைகள் செய்யாமல் உள்ளது என்றார்.

மேலும்,உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக எடுத்துக்கொண்டு,கோவில் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது, என்பன உள்ளிட்ட விபரங்களை குழு அமைத்து தமிழக முதல்வர் விரைவாக அறிக்கை கொடுக்க வேண்டும்.

கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்தால், நேரடியாக மீட்கவும், அதில் தடை உத்தரவும் பெற முடியாது என இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இடமுண்டு.ஆனால் இந்து அறம் அழிக்கின்ற துறையாக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.

தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை மறுப்பவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள்” என்று கூறினார்.

மேலும் படிக்க