• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் திதி

February 14, 2018 தண்டோரா குழு

கோவை தொடர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் தொண்டர்கள் 20ம் ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு  எதிர்கட்சி தலைவராக இருந்த  அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்ப முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒன்றும் அறியாத பெரியவர்கள்,  குழந்தைகள்  என 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள்  20 ஆம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.

கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த  குண்டு வெடிப்பு  வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் இறந்தவர்களின் நினைவாக ஆர் எஸ் புரம் டி பி ரோட்டில் நினைவுத்தூண் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

மேலும் படிக்க