• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் உயருகிறது பேருந்து கட்டணம்

February 14, 2018 தண்டோரா குழு

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைபோல் தற்போது கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்தி கொள்ள மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி குறைந்த பட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. எனினும் மாணவர்களுக்கான சலுகை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பஸ் கட்டணத்தை மாற்றாவிட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக தனியார் பஸ் நிறுவனங்கள் கூறியதை தொடர்ந்து பஸ் கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி குறைந்த பட்ச கட்டணம் சாதாரண மற்றும் நகர பஸ்களில் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், பாஸ்ட் பாசஞ்சர் பஸ்களில் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயாகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் 13 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும், சூப்பர் டீலக்ஸ் செமி ஸ்லீப்பர் பஸ்களில் 20 ரூபாயிலிருந்து 22 ரூபாயாகவும், சொகுசு ஏசி பஸ்களில் 40 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகவும், வால்வோ பஸ்களில் 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.

மேலும்,   பேருந்து கட்டண உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வருவதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க