• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எமில் கொள்ளை முயற்சி

February 12, 2018 தண்டோரா குழு

கோவை சுக்கிரவார்பேட்டையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏடிஎம் இல்கொள்ளை முயற்சி நடந்தையடுத்து, தடயங்களை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுக்கிரவார்பேட்டை  பசுவண்ணன் கோவில் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(பிப்12)அதிகாலை 3  மணியளவில் மர்ம நபர் ஒருவர் பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு பணம் எடுப்பது போல ஏ.டி.எம் மையத்திற்குள் முகத்தை மறைத்தபடி சென்றுள்ளார்.

பேக்கிற்குள் மறைத்து வைத்திருந்த கம்பியால் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த சப்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்தவர் விளக்கு போட்டு பார்க்கும்போது கொள்ளையடிக்க வந்த நபர் தப்பிவிட்டார்.

இதனையடுத்து ஆர் எஸ் புரம் காவல்துறையினர் பதிவாகியுள்ள கை ரேகைகள்,மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டும் , கொள்ளையர் குறித்த தகவல்களை திரட்டி வருகின்றனர்.

கோவையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காளப்பட்டி சாலை மற்றும் அவினாசி சாலையில் உள்ள ஏ.டி.எம்களில் கொள்ளை நடைபெற்றது.இந்த சம்பவம் தொடர்பாக வட மாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும்ஒரு ஏ.டி.எம் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்க