• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது தேவையா ? கமல்ஹாசன் கேள்வி

February 8, 2018 தண்டோரா குழு

ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது தேவையா ? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினி,கமல் இருவரும் அரசியல் வருகை அறிவிப்பினை அடுத்து, தற்போது இவர்கள் இருவரும் கூட்டணி அமைப்பார்களா⁉என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.இந்நிலையில், இது குறித்து நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் தாம் எழுதி வரும் கட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது,”ரஜினியும் நானும் அரசியலில் ஒன்றாக இணைந்து செயல்படுவோமா என்ற கேள்வி எங்கள் இருவரையுமே துரத்துகிறது. அதற்கு முதலில் ரஜினியும் நானும் கட்சி ஆரம்பித்து, எங்கள் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல், நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது தேவையா என்று நாங்கள் இருவரும் யோசனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,தொழிலாளர்களின் கோரிக்கையினை அரசு முன்னதாக தீர்வு செய்திருந்தால்,போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் ஏற்பட்டு இருக்காது எனவும், மாற்றுக் கட்சியிலிருந்து தன்னுடைய கட்சியில் இணைய பலர் தன்னிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க