• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் இணையதளம் செயல்படாது

February 3, 2018 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகைக்காகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் 2.05 மணி முதல் 3.45வரை ஒருமணி 40 நிமிடங்களுக்கும், 4ஆம் தேதி இரவு 11.30மணி முதல் 5ஆம் தேதி 1.45மணி வரை இரண்டேகால் மணி நேரமும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரங்களில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட தெற்கு, தென்மத்திய, தென்மேற்கு ரயில்வேக்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு, ரத்துசெய்தல், இடம் இருப்பது பற்றிய விசாரணை ஆகியவை செய்ய முடியாது  என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

 

 

மேலும் படிக்க