• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

February 2, 2018 தண்டோரா குழு

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூட இடைக்காலத் தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 15 அச்சகங்களை ஒன்றாக இணைத்து 5 அச்சகங்களாக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இதனையடுத்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 134 ஏக்கரில் செயல்படும் அச்சகம் மூடப்பட்டு, 65 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால், தீர்ப்பாயம் தடை விதிக்க மறுத்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை மூட இடைக்கால தடை விதித்ததுடன், ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் தடை விதித்து விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க