• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் NIA விசாரணையை தொடங்கியது

February 2, 2018 தண்டோரா குழு

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை குறித்து, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகாமை புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் மாதம்கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய கோவை போலீசார், குற்றவாளிகளை கைது செய்யாத நிலையில், அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக சதாம் உசேன், சுபைர், முபாரக், சையது அபுதாகிர் ஆகிய 4 பேரை கைது செய்தது. விசாரணையில் இவர்களுக்கு  அமைப்பு ரீதியான தொடர்புகள் இருப்பதாக தெரியவந்ததால் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை சென்று தகவல்களைப் பெற்று ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்து சசிகுமார் கொலை வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சென்னை – பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க