• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் பழமையான மனிதர் மறைவு

January 31, 2018 தண்டோரா குழு

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் பழமையான மனிதர்  தனது 113வது வயதில் நேற்று(ஜன 30) காலமானார்.

ஸ்பெயின் நாட்டைச், சேர்ந்த விவசாயி பிரான்சிஸ்கோ  ‘உலகின் பழமையான மனிதர்’ என்று கருதப்பட்டார்.கடந்த 1904ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பிறந்த பிரான்சிஸ்கோ, ஸ்பெயின் நாட்டின்  கலைஞரான ‘மார்சென்ஸா’ என்பவரின் முக சாயலை கொண்டதால், கிராமத்து மக்கள் அவரை ‘மார்சென்ஸா’ என்று அழைத்தனர்.

கடந்த 1988ம் ஆண்டு தனது மனைவியை இழந்த அவர்,தன்னுடைய  நிலத்தில் வளர்ந்த காய்கறிகளை  உண்டும், தினமும்  சிவப்பு ஒயின் அருந்தி வந்தார்.ஆலிவ் எண்ணை மற்றும்  பால் கொண்டு தயாரிக்கப்படும் ரொட்டியை தனது காலை உணவாக உண்டு வந்தார். தனது 107வயது வரை, தினமும் காலை நடைப்பயிற்சியை மேற்கொண்டார். தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு இவை தான் காரணம் என்று கடந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாடத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்க