• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எஸ் ஆர் எம் யு சார்பில் ஆர்ப்பாட்டம்

January 29, 2018 தண்டோரா குழு
கோவையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  எஸ் ஆர் எம் யு வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை உறுதி செய்யப்பட்ட பென்சனாக உடனே மாற்றி அமைத்திட வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யுவினர் கோவை ரயில் நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் எஸ் ஆர் எம் யு வின் சேலம் கோட்டத்தில் வேலை செய்பவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக உயிரை பணயம் வைத்து வேலை செய்யக் கூடியவர்களுக்கு சிறப்பு சலுகை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க