• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத் பேருந்து ஓட்டுநர் உத்தம் ஜீவன் ரக்ஷா படாக் விருதுக்கு தேர்வு

January 24, 2018 தண்டோரா குழு

குஜராத் பேருந்து ஓட்டுநர் “உத்தம் ஜீவன் ரக்ஷா படாக்” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் சலீம் கபுர். இவர் அங்கு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி, குஜராத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு மொத்தம் 73 பக்தர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தீவிரவாதிகள் பேருந்தை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் 7 பயணிகள் கொல்லப்பட்டனர், 14 பேர் படுகாயம் அடைந்தனர். இருப்பினும், அந்த பேருந்தை எங்கும் நிறுத்தாமல், அதில் பயணித்த 52 பயணிகளை, சாமார்த்தியமாக ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று, அவர்களுடைய உயிரை சலீம்
காப்பாற்றினார்.

இதனையடுத்து சலீமின் இந்த வீர செயலிற்காக படாக் விருது வழங்கப்படுகிறது.மேலும்,சலீமுக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கி கவுரவிக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க