• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

January 23, 2018 தண்டோரா குழு

கோவையில் பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக அரசு பேருந்து கட்டணங்களை 70 சதவீதம் உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  இதன் ஓரு பகுதியாக கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்  மாட்டு வண்டியில்  ஊர்வலமாக  மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்து மனு அளித்தனர்.

ஆடீஸ் வீதியில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  இருந்து 4 மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்த அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா,மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது இந்த கட்டண உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்து இருப்பதாகவும் தமிழக அரசு இந்த கட்டண உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும்,இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க