• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் சார்பாக உண்ணாவிரதம்

January 18, 2018 தண்டோரா குழு

கோவையில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாக  இந்து அமைப்புகள் சார்பாக  உண்ணாவிரதம் துவங்கியது.

ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து நிபந்தனையற்ற மன்னிப்பை ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள,  ஆண்டாள் முன் கேட்க வலியுறுத்தி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமத் ராமானுஜ ஜீயர்  ஸ்வாமிகள் நேற்று முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாக கோவையில் பஜனை செய்து நேற்று பல இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று(ஜன 18)  ஸ்ரீ வேணுகோபால சாமி கோவிலில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டாள் குறித்து தான் தெரிவித்த கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக வைரமுத்து ஏற்கனவே தெரிவித்து இருந்தாலும், ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க