• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

January 10, 2018 தண்டோரா குழு

கோவையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் இன்று(ஜன 10) வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1.1.2018 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட்டது.இந்த திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30493 புதிய வாக்காளர்களை இணைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த வாக்காளர் பட்டியல் மூலம் 30493 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு, 62,459 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதன் படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 14,02,986 ஆண் வாக்காளர்கள்,14,26,298 பெண் வாக்காளர்கள் மற்றும் 286 இதர வாக்காளர்கள் என மொத்தம் 28,29,570 வாக்காளர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.இந்த
வாக்காளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க