• Download mobile app
02 Sep 2026, WednesdayEdition - 3857
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

July 11, 2016 தண்டோரா குழு

கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாயகி(38). இவரது கணவர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் தான் நடத்திவரும் ஸ்பேர்பார்ட்ஸ் கடைக்காக அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால் முறையாகத் திருப்பி தரமுடியாததால் அவர்கள் செல்வநாயகிக்கு தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் அந்தக் கடையை பூட்டுப்போட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கடந்த வாரம் செல்வநாயகி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் கந்துவட்டி கொடுத்தவர்கள் இவருக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகம் வந்த அவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த தீக்குளிப்பு நிகழ்வு வாரா வாரம் தொடர்வதால் புகார் கொடுக்க வருபவர்கள் முகஞ்சுளிக்கத் துவங்கியுள்ளனர். இதற்குக் காவல்துறையினர் ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க