• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் அருகே மின்சார டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

January 9, 2018 தண்டோரா குழு

திருப்பூர் அருகே மின்சார டவரில் வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உள்ள காட்டய்யன் தோட்டப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்சாரம் டவர் லைனில் செல்வராஜ் என்பவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கீழே இறங்கி வருமாறு கூச்சலிட்டனர்.இச்சம்பவம் குறித்து வடக்கு காவல்துறையினருக்கும் மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.பின்னர் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் அவரை மீட்டனர்.

மீட்கப்பட்ட அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் என்றும்,இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரிய வந்தது.
இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

மேலும்,மதுபான கடையில் 2000/- ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் டவரில் ஏறியதாக கூறினார்.இதனையடுத்து அவரை காவல்துறையினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க