• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என முதல்வரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்!

January 6, 2018 தண்டோரா குழு

அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியுடன் இன்று(ஜன 6)தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்,போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், தற்போதுள்ள நெருக்கடியை நீக்கி தமிழக மக்களின் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க