• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழாவை முன்னிட்டு “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்”

January 5, 2018 தண்டோரா குழு

கோவை விழா நிகழ்வினை முன்னிட்டு “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்” என்ற மைய கருத்தில் கோவையின் பல்வேறு மதவழிபாடு தலங்களுக்கு மாணவர்கள் சென்றனர்.

கோவை மக்களின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் பத்தாவது, ‘கோவை விழா’ கொண்டாட்டம், இன்று(ஜன 5) முதல் கோலாகலமாக துவங்குகிறது.கோவை விழா நாளொரு கொண்டாட்டமாய் தொடர்ந்து, எட்டு நாள் நடக்கும் இந்த திருவிழாவில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என, பல்வேறு அமைப்புகள் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கோவை விழாவை முன்னிட்டு சாந்தி ஆசிரமம் ஒவ்வொரு ஆண்டும் “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்” என்ற மையகருத்தில் கோவையின் பல்வேறு மதவழிபாடு தலங்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் நிகழ்வுவை நடத்தி வருகிறது.

அதன்படி, பத்தாவது, ‘கோவை விழா’ கொண்டாட்டம், இன்று(ஜன 5) முதல் கோலாகலமாக துவங்கியதை அடுத்து கோவையின் 25க்கும் மேற்பட்ட பள்ளியைச் சேர்ந்த 125 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழு “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்” மேற்கொண்டனர்.

முதலில் கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கிய இந்த பயணம் டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் சர்ச், குருத்துவாரா கோயில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஜெயின் கோயில் இறுதியாக கரும்புகடையில் உள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர்.

ஒவ்வொரு வழிபாட்டு தளங்களிலும் மாணவர்களுக்கு அந்தந்த தளங்கள் குறித்த கொள்கை, கோட்பாடுகள், வழிபாட்டு முறைமைகள் குறித்து கருத்துரை நிகழ்த்தப்பட்டது.

இது குறித்து ஜஅமாத்தே இஸ்லாமி ஹிந்த் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹக்கீம் கூறும்போது,

“கோவையிலுள்ள சமயங்கள் மற்றும் கலாச்சாரவேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகள்,இளைஞர்களிடையே ஏற்படுத்துதல்.மரியாதை மற்றும் பொறுப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தை குழந்தைகளிடையே எடுத்துரைத்தல்.அமைதி மற்றும் நகர ஒற்றுமைக்காக குழந்தைகளுடன் சமயநிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுத்தல்.

மேலும்,வெவ்வேறு இடங்களிலிருந்து உருவாகின்ற நதிகள் எவ்வாறு ஒரு கடலில் சங்கமம் ஆகின்றதோ அதேபோல நாம் பின்பற்றக்கூடிய சமயங்கள் பலவாக இருந்தாலும் இறைவன் ஒன்று தான்.எனவே தான் “ஒன்றேகுலம் ஒருவனே தேவன்” என்று திருமூலர் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு நல் வழிகாட்டி உள்ளார். இதைப் பின்பற்றி நம்வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர இந்த ஒருமைப்பயணம் ஏணிப்படியாக அமையும் என்பது நிச்சயம்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க