• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே விரைவில் முடிவுக்கு வந்த 7 பேர் மயக்கப் பரபரப்பு.

July 9, 2016 தண்டோராக் குழு

கோவையில் நடைபெறும் பல்வேறு சாலைப் பணிகளில் பணிபுரிவதற்காக திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் பலர் இங்குத் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் பூண்டி பகுதியில் தங்கி அருகில் நடக்கும் சாலை போடும் வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இதில் இருந்த 7 பேர் இரு தினங்களுக்கு முன் அடுத்தடுத்து மயங்கி விழத் துவங்கினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு, உடன் இருந்தவர்களும் பீதியடைந்து மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் ஏதேனும் தொற்றுநோய் பரவியுள்ளதா என சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் மற்ற யாரிடமும் எந்த அறிகுறியும் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களிடமே தீவிர விசாரணை
மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் அனைவரும் அப்பகுதியில் கேட்பாரற்று வளர்ந்திருந்த சுண்டைக்காயை பறித்துக் குழம்பு வைத்துச் சாப்பிட்டுள்ளனர். அது அவர்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் அவர்கள் மயங்கி விழுந்தனர் எனக் கண்டுபிடித்தனர். இதனால் அப்பகுதியில் இரண்டு நாட்கள் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்க