• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 மாதத்திற்குள் ஆட்சி, அதிகாரங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடும் – டிடிவி தினகரன்

December 29, 2017 தண்டோரா குழு

3 மாதத்திற்குள் ஆட்சி, அதிகாரங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடும் என எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின் டி.டி.வி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்டசையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை சபாநாயகர் தனபாலிடம் டிடிவி தினகரன் வழங்கினார்.பின்னர் பேரவை தலைவர் அறையில் டிடிவி தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநயகர் தனபால். இதனையடுத்து ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. 3 மாதத்திற்குள் ஆட்சி, அதிகாரங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். கட்சி மட்டும் அல்ல, தமிழக மக்களும் எங்களுடன் தான் உள்ளனர். குறிப்பிட்ட சிலர் வழிவிட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியும். 5 அல்லது 6 பேரின் சுயநலமே இவ்வளவு பிரச்சினைக்கு காரணம்; சிலர் வழிவிட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க